நாகரிக அரசியலும் அநாகரிக அரசியலும்! – ஆதனூர்சோழன்

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும் திமுகவைத்தான் விமர்சனம் பண்ணுவாங்க…

எடப்பாடி ஆட்சியில் இருந்தாலும் திமுகவைத்தான் விமர்சனம் பண்ணுவாங்க…

பத்து வருஷம் அதிமுக ஆட்சியில் இருந்தாலும், திமுக ஏன் அதைச் செய்யல… திமுக ஏன் இதைச் செய்யல… என்றுதான் கேட்பார்கள்…

ஆட்சியில் இருக்கிற கட்சியை எதிர்த்து கேக்கவே மாட்டாங்க… ஏன் கேக்க மாட்டங்க….

ஏதாச்சும் ஏடாகூடமா கேஸைப் போட்டு ஜெயிலுக்குள்ள மெல்லக் கொல்லும் விஷத்தை கொடுத்துருவாங்களோனு பயம் இருக்கும்…

வீட்டுக்குள்ள கஞ்சாவோ, ஹெராயினோ வச்சுட்டு புடிச்சுட்டு போய் கொரில்லா செல்லுல போட்டுருவாங்கன்ற பயம் இருக்கும்…

இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் ஒரு முன்னேறிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படும். அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க முயற்சி செய்யும். சமூகம் முன்னேறிவிட்டால் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டார்கள். அறிவார்ந்த சமூகம் உருவாகிவிட்டால் முட்டாள்தனமா பழங்கதைகளை கேள்வி கேட்பார்கள். இதுவரை கற்பித்து வந்த புரட்டுகள் கிழிந்துவிடும். எடப்பாடி போன்ற, சீமான்போன்ற அறிவிலிகள், மட்டமான ஆதிக்கப் பெருமை பேசும் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக தன்னை விமர்சிக்கும் ஆட்களுக்கு பதில் அளிக்கும். இழிவான பிரச்சாரம் என்றால் பிரச்சாரம் செய்வோரின் லட்சணத்தை மக்களே பார்த்துக் கொள்வார்கள் என்று கடந்து போகும்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்வோராக இருந்தாலும் அவர்களுடைய கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து என்றால் குரல் எழுப்பும். அவர்களுடைய விடுதலைக்காக போராடும். ஆளும் கட்சியாக இருந்தாலும் நியாயமான விமர்சனங்களை அனுமதிக்கும். எதிரிகளாக இருந்தாலும் நியாயமான வாதங்களுக்கு செவி கொடுக்கும்.

திமுகவின் வரலாறு நெடுக இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. படியுங்கள். நன்றாக படியுங்கள். கிடைக்கி வாய்ப்புகளை பயன்படுத்தி செம்மையாக படியுங்கள் என்றே பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது. கட்சி பொதுக்கூட்டங்களையே பள்ளிக்கூடங்களாக பயன்படுத்தி வளர்ந்த இயக்கம் திமுக.

இன்றைக்கு மட்டுமல்ல, திமுக வளர்ந்து வந்த காலகட்டத்திலிருந்தே வசவுகளை தாங்கியே வளர்ந்திருக்கிறது. கட்சியின் தலைவர்கள் எதிரிகளாக இருந்தாலும் கொள்கை அளவிலேயே விமர்சனம் வைத்தார்கள். ஆயிரம் விமர்சனம் வைத்தாலும், தனிப்பட்ட உறவுகளை பேணிப் பாதுகாத்தார்கள்.

இன்றைக்கு வாய் இருக்கிறது என்பதற்காக, தனக்குப் பின்னே ஒரு கட்சி இருக்கிறது என்பதற்காக இழிவான பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். ஆவேசமாக கத்தினால் வீரம் என்று நினைக்கிறார்கள். கட்சியின் தலைவர்களே காட்டுமிராண்டிகளைப் போல இழி சொற்களை பயன்படுத்துகிறார்கள். பொய்களையே மூலதனமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மக்களும் காலமும் சரியான பாடத்தை கற்பிக்கவே செய்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்களுடைய குணம் மாறவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *