பெரிதாக ஆசைப்பட்டு இருப்பதையும் விட்டாரா தென்னரசு..!

— வெங்கட்ராம்

தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

அதிமுகவின் வேட்பாளர் தேடல் இழுபறி ஆகவே இருந்தது. சின்ன முடங்குமோ என்ற அச்சத்தில் பல வேட்பாளர்கள் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே டென்ஷன் ஆனதாக பல செய்திகள் உலாவிக் கொண்டிருந்தன. அதே நேரம் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று செய்திகளும் பறந்தன. ஏகப்பட்ட இருபடி ஆலோசனைக்கு பிறகு வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார்.

அதுவும் ஓபிஎஸ் தன் வேட்பாளரை வாபஸ் பெற்ற பின் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான ஒரே வேட்பாளராக மாறினார் தென்னரசு அவர்கள். கே.எஸ்.தென்னரசு தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். இது அரசு பதவி என்பதால் அதை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அதிமுக விற்காக தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு துணிச்சலாக களத்தில் இறங்கினார் தென்னரசு என்று பேச்சு அடிபட்டாலும், பறப்பதை நம்பி இருப்பதை விட்டாரோ என்று எண்ணம் தோன்றுகிறது.

எதுவாக இருந்தாலும் தென்னரசு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் போட்டியிட்ட இடைத்தேர்தலில் கரிசமான வாக்குகளை பெற்று தன்னை நிரூபித்து விட்டார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு தான் சாதகம் இருக்கும் என்று தெரிந்தும் களத்தில் இறங்கியது தமிழக மக்களின் கவனத்தை அவர் மீது திருப்பியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *