ஈரோடு இடை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம்…

Election

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி வாக்குப்பதிவு முடிவடைந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைய விதிமுறைகள் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை  சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அவை திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்..

 பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் சிசிடிவி கேமராக்கள் ஸ்ட்ராங் ரூம் மற்றும் அதற்குச் செல்லும் வழிகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்வையிட்டு செல்லும் அளவிற்கு வெளிப்படை தன்மையுடன் சிசிடிவி காட்சிகள் இருக்கும்..

வாக்கு எண்ணிக்கை பொறுத்த வரைக்கும் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன.. 238 வாக்குச்சாவடிகள் என்பதால் 15 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.. வாக்கு எண்ணிக்கை தாமதமாகுமா என்பதை தற்போது சொல்ல முடியாது. 77 வேட்பாளர்கள் இருப்பதால் கூடுதலாக நேரம் ஆகும், ஆனால் மிகவும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டு அறைகளில் வாக்கு எண்ணிக்கை   நடத்தப்படுகிறது..

 வாக்குப்பதிவு சுமூகமான முறையில் முடிவடைந்து இருக்கிறது வாக்குப்பதிவின்போது வந்த ஓரிரு புகார்கள் உடனுக்குடன் பார்வையிட்டு முடிக்கப்பட்டன. எந்த இடத்திலும் வாக்குப்பதிவு தடைப்படவில்லை. அனைத்து வாக்காளர்களுக்கும் போதுமான அளவு நேரம் கொடுத்து வாக்குப்பதிவு செய்ய ப்பட்டது.. அடுத்து நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *