பாஜகவினர் மீது காவல்துறையினர் கடுமையான கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி புகார்

ஒன்றிய அரசு தனக்கு எதிராக பேசுபவர்களை அமலாக்கத்துறை வருமான வரித்துறை தேசிய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மாநில தலைவர் கூட்டாக செய்தியாளகளை சந்தித்தனர், மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில, மண்டல மற்றும் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று.

இதில்   மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சை, கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட  தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  மணிக்கு நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் SDPI  கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். 

நிகழ்ச்சியில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர்கள் தெரிவித்ததாவது;

ஒன்றிய பாஜக ஆட்சியில், அனைத்து ரீதியிலும் மோசமான ஆட்சி காரணமாகவும், தேவையற்ற பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பிற மோசமான கண்காணிப்பு கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டது.  

தங்களுடைய அரசியல் எதிரிகளை ஜனநாயக ரீதியில் போராடுகிற எதிர்க்கட்சிகளை அவர்களின் குரல்வளைகளை நெரிக்கும் வகையில் நாட்டின் ஏஜென்சிகளான வருமான வரித்துறை அமலாக்கத்துறை தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது . நாடாளுமன்றத்தில் அதானிக்கும் மோடிக்கு உள்ள தொடர்பை பற்றி பேசியதால் எதிர்க்கட்சி தலைவர்களை அடாவடியாக கைது செய்து வருகிறார்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எஸ்டிபிஐ வன்மையாக கண்டிக்கிறது.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆணவத் தால் தமிழகத்தை குறிவைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். எப்படியாவது தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து தங்களின் வட இந்திய பாணி வன்முறை அரசியலை வளர்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் தொடர்ச்சியாக அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். 

பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது, காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவது, பிரதமர் மோடி குறித்து பேசும் பொதுமக்களை அதிகார திமிரில் மிரட்டுவது என தொடர்ச்சியாக அவர்கள் வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்கள். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த தங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் என கூறிக்கொள்பவர்கள் தமிழகத்திற்கும், தமிழக அரசிற்கும் எதிராக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள்.  அந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை,  ‘உங்களுடைய கைகளில் துப்பாக்கி இருக்கிறது.. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். 

நீங்க சுட்டு தள்ளிகிட்டு வந்துகிட்டே இருங்க.. மிச்சத்தை தமிழகத்தில் பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும்..’ என தமிழக அரசிற்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுகிறார்.    தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் இத்தகையவர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *