அதிமுக ஒட்டிய ஸ்டிக்கரை அகற்றிய தேர்தல் அதிகாரிகள்…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரகாரம் அருகே நஞ்சப்பன் நகரில் உள்ள உப்பிலியார் வீதியில் வாக்காளர்களின் இல்லங்களில் நமது சின்னம் இரட்டை இலை ஆதரிப்பீர் வாக்களிப்பீர் தென்னரசுக்கு என்று பச்சை நிரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஒவ்வொரு இல்லத்திலும் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை வீட்டில் இருந்த உரிமையாளர்களைக் கொண்டும் உரிமையாளர்கள் இல்லாத வீட்டில் அதிகாரிகளே அகற்றினர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் களத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் சார்ந்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு இறுதி கட்ட பரப்பரையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருபுறம் பிரச்சாரம் அனல் பறக்க நடந்து வந்தாலும் மறுபுறம் வாக்காளர்களுக்கு படபட்டு வாடா பரிசுப் பொருட்கள் கொடுப்பதை கட்டுப்படுத்த தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரக்கூடிய நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரகாரம் அருகே நஞ்சப்பன் நகரில் உள்ள உப்பிலியார் வீதியில்  வாக்காளர்களின் இல்லங்களில் நமது சின்னம் இரட்டை இலை ஆதரிப்பீர் வாக்களிப்பீர் தென்னரசுக்கு என்று பச்சை நிரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து 6வநு தேர்தல் பறக்கும் படை குழுவினர் கைத்தறி ஆய்வாளர் ராமச்சந்திர தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று ஒவ்வொரு இல்லத்திலும் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை வீட்டில் இருந்த உரிமையாளர்களைக் கொண்டும் உரிமையாளர்கள் இல்லாத வீட்டில் அதிகாரிகளே அகற்றினர். 

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் யார் என்றும் விசாரணையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் இது போன்ற செயலில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என்றும் மேலும் உயிரோடு கிழக்கு தொகுதி முழுவதும் இது போன்று வாக்காளர்களின் இல்லங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் அது அகற்றப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *