அதிமுகவில் அணியும் இல்லை பிளவும் இல்லை… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஈரோடு மாநகர் அதிமுக அலுவலகத்தில்  தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் அங்கு உள்ள ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இனி அணியும் இல்லை பிளவும் இல்லை பிரிவு இல்லை இந்த டீம் அந்த டீம் என்பதும் இல்லை என அனைத்து கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து அதிமுக என்பது இரட்டை இலை என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா அதற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி என்ற வரிசையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது, உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக‌ பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளனர். பொதுக்குழு செல்லும் என்பது தன்னெழுச்சியாக அப்போது நீக்கப்பட்டதும் செல்லும். அப்படி என்ற போது கட்சியில் யாரும் அடிப்படை உறுப்பினர்கள் கூட அவர்கள் கிடையாது. கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது. இந்த புரிதல் அனைவருக்குமே இருக்கின்றது. இனி அது ஒரு இறந்த காலம்… ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் 

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு  அதிமுக வேட்பாளர் தென்னரசு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், சிவி சண்முகம், கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், ஓ எஸ் மணியன், நத்தம் விஸ்வநாதன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, பென்ஜமின் உள்ளிட்டோரும்  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் கூறுகையில்:-மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இரட்டை சந்தோசத்தோடு தொண்டர்கள் கொண்டாடி வருகின்றோம், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு உச்சநீதி மன்றம் வழங்கி உள்ளது, முதல் தலைமுறையாக எம்.ஜி.ஆர் இதைத் தவிர இரண்டாவது தலைமுறையாக ஜெயலலிதா வளர்த்த அதிமுக மூன்றாவது தலைமுறையாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்ற இந்திய அளவில் மாபெரும் வலுவான கட்டமைப்பு உள்ள ஒரு இயக்கத்தை அடித்தட்டு மக்களோடு இணைந்து பணிந்து இருக்கின்ற இயக்கத்தை தலைமையேற்று முன்னெடுத்துள்ளார்.

இந்த நீதிமன்றம் தீர்ப்பு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தொண்டர்களையும் ஊக்கப்படுத்தி உள்ளது உற்சாகப்படுத்தியுள்ளது இன்னும் வலிமைப்படுத்தி உள்ளது, ஆரம்ப கட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களை பார்த்து என்ன சின்னம் என்று சில கேள்விகள் எல்லாம் கேட்டார்கள் இனி அணியும் இல்லை பிளவும் இல்லை பிரிவு இல்லை இந்த டீம் அந்த டீம் என்பதும் இல்லை என அனைத்து கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து அதிமுக என்பது இரட்டை இலை என்பது எம்ஜிஆர் ஜெயலலிதா அதற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி என்ற வரிசையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. 

இதனால் குறிப்பிட்ட சிலருக்கு வாக்குகள் எங்களுக்கு கூடுதலாக பெற்று தரும். அதிமுக வாக்காளர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தொழிலதிபர்கள் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றான ஒரே இயக்க அதிமுக தான் என்று வாக்களிக்கக்கூடிய நிலையை களத்தில் காண்கின்றோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெள்ளத் தெளிவாக‌ பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளனர். பொதுக்குழு செல்லும் என்பது தன்னெழுச்சியாக அப்போது நீக்கப்பட்டதும் செல்லும். அப்படி என்ற போது கட்சியில் யாரும் அடிப்படை உறுப்பினர்கள் கூட அவர்கள் கிடையாது. கட்சியில் உறுப்பினர்கள் இல்லாத யாருமே சிவில் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பெட்டிஷன் போட முடியாது. இந்த புரிதல் அனைவருக்குமே இருக்கின்றது. இனி அது ஒரு இறந்த காலம். இனி அதிமுக என்பது ஒன்றை கோடி தொண்டர்கள் ஒன்றிணைந்த வலுவான அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை இலை சின்னத்தோடு வீர நடை போடும். எந்த தங்கு தடையும் இல்லை பிரிவும் இல்லை பிளவும் இல்லை. அதிமுக என்ற வலுவான இயக்கம் ஆட்சி அமைக்கக்கூடிய பணிகளில் முழுமையாக ஈடுபடும்.

இந்த தீர்ப்பு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை நிச்சயம் அதிகரிக்கும். ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தப்பட்ட வலிமையான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இயக்கத்திற்கும் இந்த ஆட்சிக்கு எதிரானவர்கள் வாக்களிக்க கூடிய நிலையை உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து கேள்விகளுக்கும் 27க்கு பிறகு விடை கிடைக்கும் இந்தக் களம் மக்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆளுங்க சிக்கி சாதகமாக கடந்த முறை வாக்கு செலுத்தியவர்கள் கூட இந்த முறை விலைவாசி உயர்வு விசைத்தறியின் நிலை மின்கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு இதனால் ஆதங்கப்பட்டு அவர்களே மாற்றி வாக்களிக்க கூடிய நிலையை களத்தில் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *