நீதிமன்ற தீர்ப்பு போலவே ஈரோடு மக்களின் தீர்ப்பும் அமையும்… முன்னாள் அமைச்சர் ஆரூடம்…!

ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து கேபி முனுசாமி அதிமுக அளிக்கப்பட வேண்டும் இதோடு முடிவு கட்ட வேண்டும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூட கருத்துக்களை கூறினார்கள். இது எங்களை எதிர்த்து நிற்கின்ற திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணுக்கு எட்டிய தூரம் இந்த கட்சி எங்கே இருக்கிறது என்றெல்லாம் கேட்டார் அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கேட்டார்கள். 

அதற்கெல்லாம் சம்பட்டி அடிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய அதிமுக வேட்பாளர் தென்னரசு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாக வெற்றி பெறுவார். பொதுச் செயலாளர் தேர்வுகள் என்பது கட்சி நடவடிக்கை பொதுச்செயலாளர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுடன் இணைந்து இந்த கட்சி நடவடிக்கையை முன்னெடுத்து செல்வார் அதன் அடிப்படையில் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அற்புதமான தீர்ப்பு மட்டுமல்ல நியாயமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது, ஏனென்றால் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் கட்சித் தொண்டர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே முழுமையாக இருந்தார்கள், இன்று பல பேர் கட்சியை பிளவுபட நினைத்தார்கள் அதற்கெல்லாம் சரியான தீர்ப்பாக நியாயமான தீர்ப்பாக நீதிமன்றம் வழங்கி உள்ளது, 

எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகளுக்கு மேல் முதலமைச்சராக இருந்தார் ஒரு சிறந்த ஆட்சியை கொடுத்தார் மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தார்கள் இன்று அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ்நாடு மக்களும் இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவதற்கு ஒரு அச்சாரமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. ஓபிஎஸ் மனம் திரும்பி வந்தால் ஏற்று கொள்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எதிரொலிக்கும்.‌ அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *