தமிழ் தேசியத்தின் நடுவில் ஜாதியா…?

தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது. இதில் தேசியம் திராவிடம் போன்ற தத்துவங்களை தாண்டி தமிழ்தேசியம் தத்துவங்களும் முக்கியமான இடம் பிடித்திருக்கின்றன. இத்தகைய தமிழ் தேசிய கருத்துக்களில் பரப்புவதில் முக்கியமாக நபராக கருதப்படுபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஜாதியை கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்றிணைங்கள் என்பதே இவர் பிரதானமாக வைக்கும் செய்தி.

அப்பேர்ப்பட்ட கருத்தாக உயர்ந்து நிக்கும் தமிழ் தேசியம் இப்போது தனது பாதையில் இருந்து சற்று விலகிச் செல்கிறதோ என்பதை போன்று தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. அதுவும் சீமான் போன்ற தலைவர்களிடமிருந்து இது போன்ற வார்த்தைகள் வருவது துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது.

ஆம் நீங்கள் படிப்பது உண்மைதான் ஈரோடு கிழக்கில் நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஜாதியை வைத்து ஒரு ஜாதியை உயர்த்தி மற்றொரு ஜாதியை தாழ்த்தி கருத்தை தெரிவித்துள்ளார். பொதுவாக திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழ் தேசிய இயக்கத்தை சேர்ந்தவர்களின் வைக்கும் குற்றச்சாட்டு என்னவெனில் இவர்கள் பிறப்பின் அடிப்படையில் கொள்கையை வகைக்குறார்கள் அந்த கொள்கை வளர்ந்து இறுதியில் ஜாதியிடம் தான் சென்று முடியும்.

பிறப்பால் ஒருவன் என் கொள்கையே முடிவு செய்வது சமாதானத்தின் அடிப்படையே என்று கூறுவார்கள். இப்போது அந்த கருத்து மெய் பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. இனி இது போன்ற கருத்துக்கள் பாசிசத்திற்கு எதிராக நிற்கும் தமிழ் மண்ணில் இருந்து கேட்கவே கூடாது என்பதே சாதாரண மக்களின் எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *