ஐ.டி ரைட் அதானி மீது விட முடியுமா மோடி… காங்கிரஸ் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சாடல

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தினால் மோடியின் 4+4 கூட்டணி மொத்தமும் வெளிச்சத்திற்கு வரும்-பல்லடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோபி பேட்டி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

காங்கிரஸ் கட்சியினுடைய அகில இந்திய மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்ரவரி 23,24,25 ஆகிய‌ மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிலே திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து 12 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றுபட்ட திருப்பூரில் இருந்து கலந்து கொள்ளவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் தலைமை என்னை நியமித்து இருக்கிறது. இந்த நேரத்திலே அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, தலைவி பிரியங்கா காந்தி, கார்கே அவர்களுக்கு இந்த நேரத்திலே நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

பிஜேபி அரசு மிகவும் தரம் தாழ்ந்த செயல்களை செய்து கொண்டிருக்கிறது.குறிப்பாக மக்களுக்கு சேவை புரிகின்ற ஒரு அரசாக இது எந்த நேரமும் இருக்கவில்லை.ஏழு ஆண்டு காலம் பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு எந்தவித திட்டத்தையும் தங்கள் கூறியதை நிறைவேற்றாமல் உள்ளார்கள். உச்சபட்சமாக ராய்ப்பூர்லே நடைபெறுகின்ற  மாநாட்டை சீர்குலைக்க பாஜக பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

காங்கிரஸ் மீண்டும் உயிர்பித்து பழைய நிலைக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, வீரநடை போடுகிறது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பெரு முயற்சியிலேகன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடைபெற்று இந்தியா முழுவதும் இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகள், சாமானிய மக்கள் எல்லாம் காங்கிரசின்பால் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற ஒரே இயக்கம் மக்களுக்கான இயக்கம் நாங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு முகம் ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு முகம் கிடையாது.

அந்த அடிப்படையில எங்களுடைய அந்த மாநாட்டை சீர்குலைக்க உச்சபட்சமாக சிபிஐ ரைடு என்று சொல்லி எங்களுடைய காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாநில எம்எல்ஏக்கள், அமைச்சர்களை சத்தீஸ்கர் மாநிலத்தில் குறிப்பாக மாநாட்டிற்கு மூன்று நாட்கள் முன்பாக அவர்கள் சோதனை செய்கிற அடிப்படையில் எங்களுடைய மாநாட்டு துரித நடவடிக்கைகளை சீர்குழைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மாறாக எங்கள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசினார். 

அதானி குடும்பம் நாட்டில் பல்வேறு ஷெல் கம்பெனிகளை உருவாக்கி ஒரு போலியான பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை செய்து மிகப் பெரிய ஏமாற்றத்தை நாட்டு மக்களுக்கு  வரி பணத்திற்கும் குறிப்பாக எஸ்பிஐ, எல்ஐசி யில் சாமானிய மக்கள் ஏழை மக்கள் முதலீடு செய்த பணத்தை கையாடல் செய்கின்ற அளவிலே sbi பங்குகளையும், எல்ஐசி னுடைய பங்குகளையும் அதிகப்படியான அதானி குடும்பத்தினுடைய பங்குகளை வாங்க ஏமாற்று வேலைகள் செய்திருக்கிறார்கள். 

இதனால் பெரு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு sbi வங்கியும் எல்ஐசி நிறுவனமும் பாதிப்படையும் என்று எங்கள் தலைவர் பாராளுமன்றத்தில் கேட்டால் நம்மளுடைய வெங்காயமாமி என்று சொல்ல கூடிய நம்மளுடைய நிதி அமைச்சர் ரொம்ப தரம் தாழ்ந்து ,குறைந்தபட்சம் 5 லட்சம் ஆவது டெபாசிட் பண்ணா உங்களுக்கு கொடுத்துடுவோம் ஒரு நிதியமைச்சர் பேசுகின்ற பேச்சா இது?..   நாட்டிலே எதிர்க்கட்சியாக செயல்படுகின்ற, இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த பல பொது நிறுவனங்களை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற பெரிய தலைவர்கள் உருவாக்கிய காங்கிரஸ் கட்சியினுடைய மாநாட்டை சீர்குலைக்க இந்த மோடி முயற்சி எடுத்து வருகிறார். 

இதை திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளபடியே வன்மையாக கண்டிக்கிறது. இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தியா முழுவதும் எங்கள் கட்சியினுடைய தோழர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து இந்த மோடியை 2024 ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி , மக்களுக்கான இயக்கம் மக்களுக்காக பணி செய்கின்ற இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் ஒன்றுதான் என்ற ஒரே கொள்கை முழக்கத்துடன் செயல்படுவோம். 

மோடி அரசு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் எங்கள் தலைவர்களை விசாரிப்பதற்கு பதிலாக அவர்கள் அதானி குடும்பத்தை விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். மக்களுடைய வரி பணத்தை காப்பாற்ற வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மோடி அமித்ஷா பார்த்து ஒரே ஒரு சவால்… வாக்குச்சீட்டு முறை தேர்தல் தான் ஒரே தீர்வு. வாக்குச்சீட்டு முறை வைத்தால் அதானியில், இருந்து அம்பானியிலிருந்து ,மோடியிலிருந்து, 4+4  கூட்டணி மொத்த முகமும் வெளிப்படும் இவர்களின் முகமூடி மக்களுக்கு வெளிப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *