தமிழக மீனவர் சுட்டு கொலை! அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்… முஸ்லிம் லீக் அபூபக்கர்

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் வேண்டுகோள்.

தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75 ஆவது ஆண்டு பவள விழா வரும் மார்ச் 10ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கான  முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் மீராசா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அபுபக்கர் கூறுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பவளவிழா மாநாடு வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் மாநாடாக அமையும் இதில் பல்வேறு அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

 கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர் மீது சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூற வேண்டும். எதற்கு எடுத்தாலும் தமிழர்களுக்கு பாதிப்பென்றால் குரல் கொடுப்பது பாஜக என்று கூறும் அண்ணாமலை இந்த சம்பவம் குறித்து உடனடியாக பேச வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *