ஈரோடு இடைத்தேர்தல் என்பது தமிழகத்தின் தன்மான பிரச்சனை… எம்.பி. சு. வெங்கடேசன்

ஈரோடு இடைத்தேர்தல் என்பது தமிழகத்தின் தன்மான பிரச்சனை குறித்த விஷயமாகும் இதற்கு ஈரோடு மக்கள் நல்ல பதில் அளிப்பார்கள்….. திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் சு. வெங்கடேசன் இராஜபாளையத்தில் பேட்டி…. 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவ மாணவிகள் தமிழர்களின் வரலாறு மற்றும் படித்து முடித்தபின் தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு பெறுவதற்காக தமிழ்க்கனவு என்ற நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற இன்றைய நிகழ்ச்சியில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தமிழக தலைமை செயல் அதிகாரி சிவராஜா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளிடையே தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசும் போது தமிழகத்தின் வரலாற்று பெருமைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ் கனவு நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றும் இந்தியாவிலேயே உயர்கல்வியில் 52 சதவீதம் என்ற அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ள நம் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியானது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்றும் 

தமிழக முழுவதும் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சி இரண்டாவது கட்ட நிகழ்வு இராஜபாளையத்தில் நடந்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தமிழக முழுவதும் இது தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும்

இந்த தேர்தல் ஆனது தமிழகத்தின் உரிமை மற்றும் தன்மானத்திற்கு ஏற்பட்டுள்ள கேள்விக்கு சரியான பதிலடி தரக்கூடிய தேர்தல் ஆக இருக்கும் என்றும் கூறினார்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டுவர மாநில அரசுகளிடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து விஷயங்களை அவர்கள் பேசி விட்டார்கள் என்றும் இதையாவது தயவு செய்து நடத்திக் காட்டட்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *