ஓபிஎஸ் ஆதரவாளர் வா.புகழேந்திக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… கோஷ்டி பூசலில் உச்சத்தில் அதிமுக…!

வா புகழேந்தி இறந்துவிட்டதாக பொய்யான தகவல் பரப்பியதாக எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவாளர்கள் தரப்பினரை கண்டித்து போஸ்டர் நீதிமன்றம், கல்லூரி வாசல்களில் ஓ பி எஸ் தரப்பினர் போஸ்டர் யுத்தம் 

ராணுவ கட்டுப்பாடு போல் இருந்த அதிமுக இன்று சிதற் தேங்காய் போல , சில்லு சில்லாக உடைந்திருக்கின்றது. கோஸ்டி மோதலால் அதிமுக கட்சி தலைவர்கள் சிதறி பயணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஒ பன்னீர் செல்வம் மறுபுறம் அதிமுகவின் தலைமையின் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு விட்டு வைப்பதாக தெரியவில்லை. 

இந்த நிலையிலே ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுகின்றன . அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் ஒருவர், ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான பெங்களூர் வா. புகழேந்தி மறைந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றார். 

இதனை கண்டித்த ஓ பி எஸ் தரப்பினர், பொய் அவதூறு பரப்பிய பழனிச்சாமி தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் தந்திருக்கின்றனர். இந்த நிலையில் கோவையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜாகிர் உசேன் என்பவர் வா புகழேந்தி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வலைதளத்தில் பகிர்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போஸ்டர் போட்டிருக்கின்றார். 

வா புகழேந்தி இறந்து விட்டதாக பொய்யான அவதூறான தகவல் பகிர்ந்த பழனிச்சாமி கூட்டத்திற்கு கண்டனம் என்றும் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். நீதிமன்ற வளாகம், அரசாங்கக் கலைக் கல்லூரி, கலெக்டர் அலுவலகம், குனியமுத்தூர், பீளமேடு என பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதால் வரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றன . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *