அகில இந்திய அரசியலை தீர்மானிக்கின்ற தேர்தல்… ஈரோட்டில் அமைச்சர் ரகுபதி பேச்சு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான சாதாரண தேர்தல் அல்ல அகில இந்திய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து தீர்மானிக்கின்ற தேர்தல், அதனால் அதிகப்படியான வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இலக்க செய்ய வேண்டும், அதுதான் நமது உழைப்புக்கு கிடைக்கும் மறியாதை… பிரச்சாரத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

மதத்தால் ஜாதியால் சகோதரத்துவத்துடன் இருக்கும் நம்மை பிரிக்க நினைக்கும் சத்திகளுக்கு மரண அடி தர வேண்டும் என்றால் அதற்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், நாட்டை குட்டிச்சோரக்க வேண்டும் என்று நினைக்கு பாசிச சக்திகளை தோல்வியுற செய்ய வேண்டும்… வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை தொகுதிக்குட்பட்ட கிராமடை பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன் கயல்விழி கீதா ஜீவன் ஆகியோருடனும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடனும் இணைந்து கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

அதன் பிறகு ‌ புதுமை காலனி பகுதியில் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது இ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பேசுகையில்: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான சாதாரண தேர்தல் அல்ல அகில இந்திய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து தீர்மானிக்கின்ற தேர்தல், அதனால் அதிகப்படியான வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இலக்க செய்ய வேண்டும், அதுதான் நமது உழைப்புக்கு கிடைக்கும் மறியாதை, 

அதிமுகவில் ஓட்டு கேட்டு செல்பவர்கள் கொத்த மல்லி கீரை புதினா கட்டுகளுடன் செல்கின்றனராம், அவர்களுக்கு தற்போது தேர்தல் முடிவு தெரிந்து விட்டதால் அவ்வாறு செல்கின்றனர் எதிர்காலத்தில் அவர்கள் கொத்தமல்லி கீரை புதினா கட்டுவிற்க தற்போது ஒத்திகை பார்த்து வருகின்றனர், தமிழர்களை தலைநிமிர செய்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் என்று பேசினார்.

பின்னர் பேசிய வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த கட்டணமில்லா பேருந்தில் சுதந்திர மாக செல்ல முடிகிறது, அதேபோல் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் அண்ணன் தம்பி தங்கைகளாக சகோதரத்துவத்துடனும் ஒரு தாய் பிள்ளைகளாக நாம் இணைந்து இருக்கின்றோம் ஆனால் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் பிரித்துவிட நினைப்பவர்கள் டெல்லியில் ஆட்சி செய்து வருகின்றனர் நம்மை பிரிக்க சதி செய்து வருகின்றனர். 

அப்படி பிரிக்க நினைக்கும் சத்திகளுக்கு மரண அடி தர வேண்டும் என்றால் அதற்கு கை சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும், நாட்டை குட்டிச்சோரக்க வேண்டும் என்று நினைக்கு பாசிச சக்திகளை தோல்வியுற செய்ய வேண்டும், நான் வாக்கு கேட்பதற்காக மட்டும் வரவில்லை, உங்களது குறைகளை கேட்டு தேர்தலுக்குப் பிறகு நிவர்த்தி செய்வதற்காகவே வந்துள்ளேன், நான் சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நல்ல பல காரியங்களை செய்யக்குடிய நிலைக்காக போட்டியிடுகின்றேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *