காட்சியும், ஆட்சியும் மாறும் வெயிட் அண்ட் சி… ஈபிஎஸ்… சூசகம்…!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது, இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றார், 

காட்சியும், ஆட்சியும் மாறும், அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் எதிர் வினைகளை சந்திக்க வேண்டியது வரும் என ஈரோடு வேப்பம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்றே நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், ஜெயலலிதாவின் தெய்வீக வாக்கை போல் 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றிப்பெற்றோம். அதேபோல் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது 2024ல் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும், ஒருவாக்கு கூட சிதறவிடாமல் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்,

22 மாத திமுக ஆட்சியில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை, ரவுடிகள் அட்டகாசம் குண்டர்கள் அட்டகாசம் கட்டபஞ்சாயத்து, போதை பொருள்ட்கள் தலைவிரித்துள்ளது திமுக ஆட்சியில் மக்கள் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ஏராளமான திட்டங்களை வாரி வாரி வழங்கியவர் அதிமுகவினர் தான், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் பொருளாதரத்தில் நாம் முன்னேற வேண்டும், ஈரோடு மாவட்டத்தின் ஜவுளி உள்ளிட்ட தொழில் பல வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளோம், ஏரிகள் தூர் வார்ப்பட்டது. தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளது, ஜவுளி தொழில் செய்யவும் வளர்ச்சிக்காகவும் அதிமுக பல ஆண்டுகளாக பாடுப்பட்டது, விசைத்தெறி உரிமையாளர்களுக்கு வளர்ச்சி கொடுப்பதற்கு வருடவருடம் இலவச வேட்டி , சேலையை வழங்கி வந்தோம், 

ஆனால் திமுக ஆட்சியில் அதை நிறுத்தியதால், பல ஆயிரம் நெசவாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர், விலையில்லா வேட்டி சேலையை அவர்களுக்கு கொடுத்து இருந்தால் , இந்த தொழில் முடங்கி இருக்காது, விசைத்தறி குடும்பத்தின் பெண்கள் கண் கலங்கி உள்ளனர், திறைமையற்ற் முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆட்சி செய்து வருகிறார், கரேப்சன், கலெக்சன், கமிக்சன் வாங்குவதில் தான் முதலமைச்சர் முதலிடம், 

அமைச்சர் அதிகளவில் யார் கமிசன் தருவார்கள் என்று பார்த்து வருகிறார், அதிமுக கூட்டத்தில் பங்குபெறமால் இருக்க மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றார், காட்சியும், ஆட்சியும் மாறும், அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் எதிர்வினை சந்திப்பீங்க, சீப்பை ஒளித்தால் திருமணம் தடை பெறாது போன்று, அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, காற்றை எப்படி தடுக்க முடியாதே 

மேலும் இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், அன்பழகன் ராஜேந்திர பாலாஜி சிவி சண்முகம் வளர்மதி, கேபி முனுசாமி, பொன்னையன் முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் அதிமுகவின் கூட்டணி கட்சியிரான ஜி கே வாசன் ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி தேவநாதயாதவ், பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *