அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைத்து வருகிறது… எடப்பாடி குற்றச்சாட்டு…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். 

அதிமுக வெற்றியை தடுக்க முடியாது, தமிழ்நாடு முதலமைச்சருக்கு தேர்தல் பயம்வந்துவிட்டது அதனால் தான் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் நிற்கும்போது அவர் வெற்றி பெற 20 அமைச்சர்களை இறக்கி உள்ளனர், தினமும் கிடா விருந்து நடைபெறுகிறது, வீடுவிடாக சென்று  ஆயிரம் பணம் கொடுக்கிறார்கள், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம், எல்லா துறையும் சீரலிந்து கிடக்கிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கும் அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைத்து வருகிறது.

22 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் திமுக செயல் படுத்தவில்லை, பேனா வை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.. மறைந்தவர்களை பற்றி பேசகூடாது ஆனால் எல்லா பக்கமும் எதிர்ப்பு வருகிறது அதை சிந்தித்து பார்க்க வேண்டும், கடலில் வைத்தால் தான் பேனாவா, நினைவு மண்டபன் முன் வைக்க வேண்டியது தானே, 2 கோடியில் வைக்க வேண்டியது தானே!! 80 கோடியில் தான் வைக்கனுமா?? 78 கோடியை மக்களுக்கு செலவு செய்ய வேண்டியது தானே என்றும் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில் அற்புதமான பொங்கல் பரிசை கொடுத்துள்ளனர் திமுகவினர் கடந்த ஆண்டு கொடுப்பட்ட பொங்கல் பரிசை நாம் மறக்க முடியுமா??  தரமற்ற பொருளை கொடுத்து அதில் 500 கோடி ஊழல் செய்துள்ளனர். ஏழை மக்களுக்கு வழங்கப்படக்கூடிய பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த ஒரு அரசு திமுக அரசு தான் பணம்.கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள், இரட்டை இலைக்கு வாக்கு அளித்துருங்கள்.. ஈரோட்டை சுற்றி அமைப்பட்ட பல முக்கிய சாலைகளை ரத்து செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 70 கோடி, தடையில்ல மின்சாரம் கொடுக்க 80 கோடி, 42 கோடியில் பேருந்து நிலையம் இதுபோன்ற பல சாதனை திட்டங்கள் கொடுத்துள்ளோம், முதல்வருக்கு நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை.. மகன் நடித்த படத்தின் வெற்றியும் வசூல் பற்றி தான் கவலை, உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து அமைச்சராக்கி உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *