இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி பேட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழைத் தேடி என்கின்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் 21ஆம் தேதி சென்னையில் துவங்கி 28ஆம் தேதி மதுரையில் முடிக்கிறார்
இந்த பரப்புரை பயணம் தமிழை மீட்டெடுக்கவும் தமிழை வளர்க்கவும் தமிழை காப்பாற்றப்பட வேண்டும் எனவும்
தமிழ் சிதைந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தில் இந்த பயணம் நடைபெறுகிறது பயணத்தின் போது தமிழ் அன்னை சிலையுடன் இந்த பயணம் தொடங்கப்படுகிறது
இந்த பயணம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் எனவும் இந்த பயணம் என்பது எந்தவித அரசியல் கலப்பு இல்லாமல் அரசியல் கொடி இல்லாமல் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இந்த பயணம் நடைபெறுகிறது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உலக தாய்மொழி தினமாக பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துள்ளது அந்த தேதியில் தான் இந்த பயணத்தை எங்கள் மருத்துவர் ஐயா தொடங்குகிறார் எனவும் அதற்குண்டான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மேலும் தமிழகத்தில் இனி எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது நாங்கள் ஒரே ஒரு இடைத்தேர்தல் மட்டுமே போட்டியிட்டு உள்ளோம் இனிவரும் காலங்களில் போட்டியிட மாட்டோம் இடைத் தேர்தல் ஒரு தொகுதி வெற்றியால் ஆட்சி மாற்றம் நடைபெறுமா அப்படி இருக்கும் நிலையில் ஏன் இந்த இடைதேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்தில் கொண்டு இனி தமிழகத்தில் நடைபெறும் எந்த ஒரு இடைதேர்தலில் பாமக போட்டியிடாது என்றும் இந்த இடை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை எனவும் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்