நீட் தேர்வு, எய்ம்ஸ் பற்றி பேசி பாஜகவிடம் பரிதவித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு…

ஈரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரவு திரட்டினார் பாஜக அறிமுக கூட்டத்தில் பேசிய வேட்பாளர் தென்னரசு பேச்சுவாக்கில்  வாக்குறுதி அளித்தபடி திமுக  நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை,  எய்ட்ஸ் மருத்துவமனையும் கட்டவில்லை என்று பேசி பரபரப்பை  ஏற்படுத்தினார்.. இதில் பாஜக நிர்வாகிகள், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை வரவேற்று தங்கள் கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்…

அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு இன்று நண்பகல்,  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் . அதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஈரோடு பச்சப்பாலி பகுதியில்  உள்ள   பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் தென்னரசு சென்றார்..

அவரை ஈரோடு மாவட்ட பாஜக தலைவர் வேதாநந்தம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த டாக்டர். சரஸ்வதி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், பாஜகவினர் மத்தியில் வேட்பாளர் தென்னரசு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அப்போது பேசிய அதிமுக  வேட்பாளர் தென்னரசு, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் என்பதை பட்டியலிட்டு பேசும்போது,  இந்த ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கொண்டுவரப்படவில்லை , நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர் கூறும் போது மின்சார கட்டண உயர்வு,  சொத்து வரி உயர்வு , பால் விலை உயர்வு போன்றவற்றின் பாதிப்பை  மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 

வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கான  ஆயிரம் ரூபாய் இதுவரை தரவில்லை , தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.  மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படவில்லை ,  அம்மா சிமெண்ட் நிறுத்தப்பட்டுள்ளது என்றும்,  அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டனர் என்று  மக்களிடம்  கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியவர் ,  நீட் தேர்வு ரத்து  செய்யப்படும் என்றனர் , ஆனால் நீட் தேர்வை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்ற அவர் ,  எய்ம்ஸ் மருத்துவமனையையும்  கொண்டு வர வில்லை என்று பேச்சுவாக்கில் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ஈரோட்டிற்கு 484 கோடி மதிப்பில் மாநகராட்சி என தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் இன்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள்  பயனடைந்து வருகின்றனர். தொகுதிக்கு 2000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. எனவே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் திமுக ஆட்சியில் நிறைவேற்றாத பணிகளையும் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கூப்பிட்ட நேரத்திற்கு  தொகுதிக்கு  நான் வந்து விடுவேன்,  தொகுதியில் தான் சுற்று சுற்றி வருவேன். இரட்டை இலை சின்னம் கிடைத்தது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது,  எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றும் இந்த வெற்றி எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *