அதானியை கண்டித்து எஸ்பிஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிலதிபர் அதானிக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்து காஞ்சிபுரம் எஸ் பி ஐ வங்கி முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாமானிய மக்கள் தங்களது கடின உழைப்பில் சேமித்த பணத்தை எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். 

அவ்வகையில் எல்ஐசியின் 29 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் 45 கோடி எஸ் பி ஐ கணக்கு வைத்திருப்பவர்களின்  முதலீடுகளை பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில தலைவர் அழகிரி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அன்னை இந்திரா காந்தி சாலையில் அமைந்துள்ள 

எஸ் பி ஐ வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் , பொதுமக்களின் சிறு முதலீட்டு பணத்தை தனது சுய ஆதாயத்திற்காக முதலீடு செய்ய நிர்பந்திக்கும் மோடி அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஹின்டென்பர்க் ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அல்லது கூட்டு நாடாளுமன்ற குழுவின் பாரபட்ச மற்ற விசாரணை நடத்த வேண்டும், எல் ஐ சி எஸ்பிஐ மற்றும் பிரதேசியாக மயமாக்கப்பட்ட வங்கிகளின் முதலீடு செய்ய நிர்பந்தித்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க சரியான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *