முந்திக்கொண்ட ஓபிஎஸ்… இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் சிறப்பு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல், ஏ பி பார்ம் கொடுக்காத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா என்று விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்து அதிமுக என்று குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கட்டாயம் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் மக்கள் ஆதரவு உள்ளது என வேட்பாளர் செந்தில் முருகன் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஓபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு மாநகராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான சிவக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.‌ அதிமுகவில் இருதரப்பு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து முடிவு எதுவும் இதுவரை எட்டப்படாததால் அதிமுக சார்பில் ஏ பி பார்ம் கொடுக்காத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியா என்று விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ஆம் என்று பதில் அளித்து அதிமுக என்று குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அதிமுக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் கூறுகையில்: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன், அதிமுக வேட்பாளர் என்ற முறையில் தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 

இரட்டை இலை சின்னம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, மக்கள் மத்தியிலும் ஆதரவு உள்ளது, பிரச்சாரம் இன்றிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்படும், ஜெயலலிதா நினைவு இடம் ஓபிஎஸ் இடம் ஆசிர்வாதம் பெற்று பணியை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து வேட்பாளுடன் வந்த அதிமுக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்: ஏ பி பார்ம் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடிய கடைசி நாளான ஏழாம் தேதி மூன்று மணி வரை கொடுக்கலாம் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த சம்பவத்தில் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் மேலும் கட்டாயம் ஓபிஎஸ் சிறப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *