ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்பு மனு தாக்கல்.. 

EVKS Elangovan

இரட்டை இலை சின்னம்  குறித்து நாளை உச்சநீதி மன்றத்தில்  விசாரணை நடைபெறும்  பரபரப்பான சூழலில், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக.வின் இரு அணி வேட்பாளர்களும் நாளை வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்… 

பிப்ரவரி 27 ல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த 31 ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக எடப்பாடி அணியில் கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் இது குறித்த விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளும் நாளை அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். ஓபிஎஸ் அணி வேட்பாளர் காலை 11 மணிக்கும், எடப்பாடி அணி வேட்பாளர் 12 மணிக்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்..

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து இரட்டை இலை சின்னம் பெறக்கூடிய வேட்பாளர்,     பின்னர் கட்சி தலைமையின் அங்கீகார படிவத்தை வழங்கி சின்னத்தை பெற முடியும் என்றும் அல்லது சின்னம் முடக்கப்பட்டால் இரு தரப்பினருக்கும் சுயேட்சை சின்னம் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதனிடையே, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய உள்ளார்… கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிற்பகல் 1 மணி அளவில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்க உள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *