அதிமுகவா? அமமுகவா? ஜோடி போட்டுக்கலாமா…! சண்டைக்கு இழுக்கும் இடைத்தேர்தல் களம்…

அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா அவர்கள் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் நாங்கள் 5 ஆண்டுகளாக தனிக்கட்சி நடத்தி எங்களுக்கென்று ஒரு கொள்கை அமைத்து தனிச் சின்னமும் பெற்று செயல்பட்டு வருகிறோம் 

அதனால் அனைவரிடமும் சென்றுள்ள நாங்கள் அதிக வாக்குகளை பெற உள்ளோமா அல்லது சுயட்சை சின்னத்தில் போட்டியிடக் கூடிய அதிமுக அதிக வாக்குகளை பெற உள்ளதா என்று பார்க்கத்தான் போகிறீர்கள்… ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கட்சியின் வேட்பாளர் சிவபிரசாத் பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. இந்நிலையில் இதில் அமமுக வேட்பாளர் சிவ பிரசாத் தனது வேட்பு மனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆணையருமான சிவக்குமாரிடம் அளித்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த‌ வேட்பாளர் சிவபிரசாத் கூறுகையில்: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளம், இருக்கிற குறையை சொல்லியும் நாங்கள் செய்ய உள்ளதை சொல்லியும் வாக்கு கேட்க உள்ளோம்,  இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மாற்றத்தை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம், 

அதிமுகவிற்கு சின்னம் இருக்கிறதா அவர்கள் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் நாங்கள் 5 ஆண்டுகளாக தனிக்கட்சி நடத்தி எங்களுக்கென்று ஒரு கொள்கை அமைத்து தனிச் சின்னமும் பெற்று செயல்பட்டு வருகிறோம் அதனால் அனைவரிடமும் சென்றுள்ள நாங்கள் அதிக வாக்குகளை பெற உள்ளோமா அல்லது சுயட்சை சின்னத்தில் போட்டியிடக் கூடிய அதிமுக அதிக வாக்குகளை பெற உள்ளதா என்று பார்க்கத்தான் போகிறீர்கள்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகின்ற 11ம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார், அனைவரும் அணுகும் முறையில் செயல்படுவேன், தற்போது இங்கு பணப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர் நாளை முதல் தான் நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளம் பண பட்டுவாடா நடைபெற்றால் நாங்களும் தேர்தல் ஆணையத்தை அனுகி புகார் தெரிவிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *