‘என் வீட்டில் வாட்ச்மேனும் இல்லை, நாயும் கிடையாது…’ ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு

என் வீட்டில் வாட்ச் மேனும், நாயும் கிடையாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம்,  இங்கேயே தான் சுற்றி கொண்டிருப்பேன், என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் வேலைக்காரனாக இருந்து பணியாற்றுவேன் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு தெரிவித்துள்ளார்.. 

அதிமுகவில் வேட்பாளர், சின்னம் தொடர்பாக நிலவிய குழப்பமான சூழலுக்கிடையே, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு.வை அக்கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது..  ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் அதிமுக இடைத்தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையினை தேர்தல் பணிக்குழு தலைவர் கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திறப்பு விழா கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிமுகவின் வேட்பாளராக கே எஸ் தென்னரசு கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டார்.

 இந்த தகவல் கிடைத்ததும் கழுத்தில் அதிமுக சால்வையை அணிந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த தென்னரசுவிற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

 நிகழ்ச்சியில் பேசிய தென்னரசு, என் வீட்டில் வாட்ச்மேனும் கிடையாது நாயும் கிடையாது தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை சந்திக்கலாம் இங்கேயேதான் நான் சுற்றிக் கொண்டிருப்பேன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் வீட்டு வேலைக்காரனாக இருந்து பணியாற்றுவேன் என்றார். 

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஆட்சியில் மட்டுமே   ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன அரசு மருத்துவமனை மேம்பாலம் மருத்துவமனை கட்டிடம் ஆட்சியர் அலுவலக கட்டிடம் வணிகவளாக கட்டிடம் என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன என்றார்.. பின்னர் கே ஏ செங்கோட்டையன் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *