ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர்: கே.எஸ்.தென்னரசு…!

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  வயது 65. 

1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர்,

1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர், 1999-ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 2000-ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 2010-ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்,

2011-ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். 

2001 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 

 ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். 25 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். பெரியார் மாவட்ட தொழில் வர்த்தகசபை துணைத்தலைவராக 22 ஆண்டுகள், ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டிங் அசோசியேசன் தலைவராக 20 ஆண்டுகள், செயலாளராக 3 ஆண்டுகள், தமிழ்நாடு பிரிண்டிங் -பிராசசிங் சம்மேளன மாநில தலைவராக 16 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார். 

தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் மாவட்ட துணைத்தலைவராகவும், ஈரோடு மாவட்ட பாரத் பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் தலைவராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்த இவர் மனைவி டி.பத்மினி, மகன் டி.கலையரசன், மருமகள் வி.சுகாசினி, மகள் டி.கலைவாணி, மருமகன் எஸ்.பரணிதரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *