ஓபிஎஸ், ஈபிஎஸ் தனிதனியாக வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள்… ஜான்பாண்டியன் ஆரூடம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனிதனியாக வேட்பாளர்களை அறிவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன், நாளை வெளிவரும் தீர்ப்பின்படி கூட்டணி கட்சிகள் கூடி முடிவெடுக்கப்படும் என கொடைரோட்டில்  ஜான்பாண்டியன் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர்களின் 26-ம் ஆண்டு தைபூச முதல் மறியாதை மண்டகப்படி விழாவிற்கு நெல்லையிலிருந்து வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு டோல்கேட் அருகே பாரதிய ஜனதாகட்சி நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் இராணி கருப்பசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு,மேற்கு மாவட்ட செயலாளர்கள் வெற்றிச்செல்வம்,முத்துரத்தினவேல் தலைமையில் பூரண கும்ப மறியாதை அளிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது,

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் வரலாற்று  சிறப்புமிக்க 26-ஆண்டு மண்டகப்படி பூஜையில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த விழாவில் கலந்து கொள்ளும் தேவேந்திரகுல சொந்தங்களை வரவேற்கிறேன்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் OPS- சும் EPS-சும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தமாட்டார்கள் என நம்புகிறேன்,

நாளை வெளிவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடைப்படையில் கூட்டணி கட்சிகள் கூடி ஒருமித்த கருத்துடன் ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அந்த நேரத்தில் அறிவிக்கப்படும்.பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஆதரவோடு நான் தென்காசி தொகுதியில் போட்டியிடுவேன் என, ஏற்கனவே தெரிவித்து விட்டேன். 

இவ்வாறு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இவ்வரவேற்பின் போது திண்டுக்கல் தமிழக முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட தலைவர் முருகவேல்பாண்டியன்,மேற்கு மாவட்ட இணைச்செயாளர் பூபதிராஜா,மதுரை மாவட்ட செயலாளர் பாலாஜி மற்றும் மாவட்ட ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் கொண்டர்கள் என ஏராளமானோர் கழந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *