ஆன்லைன் சூதாட்டம் மூலம் ஒன்றிய அரசுக்கு 12 ஆயிரத்து 390 கோடி ஜிஎஸ்டி கிடைக்கிறது, சுப. வீரபாண்டியன் குற்றச்சாட்டு

குடும்பம் உள்ளவர்கள் மட்டுமே வாரிசு அரசு நடத்த முடியும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேச்சு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவிற்குள்ளேயே நான்கு அணிகள் உள்ளது அதில் பொதுக்குழு கூட்டுவதற்கு நீதிமன்றம் நாடும்  நிலையில் உள்ள நிலையில் திமுகவை குறை கூறுவது வேடிக்கையாக  உள்ளது மகாராஸ்ட்ரா போன்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேறுவது பெரிய காரியம் இல்லை, 

ஏனெனில் இந்தியா கேட் மும்பையில் தான் உள்ளது, அதனால் தான் வெளிநாடுகளிலிருந்து வருவோர்கள் அங்கு தொழில் தொடங்குகின்றனர். ஆனால் இந்தியாவின் கடைகோடியில் உள்ள தமிழகம் தொழில் வளர்ச்சி போன்றவற்றில் முன்னோடியாக மாநிலமாக திகழ்கிறது. அதேபோல் மருத்துவத்துறையில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முதல் இடம் பிடித்திருக்கிறது அதனை மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது 

அதுவும் மாண்புமிகு தளபதி முதல்வராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளிலேயே சாதனை படைத்துள்ளார் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இல்லை என்று ஒன்றிய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.இனியும் தாமதப்படுத்தாமல் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்திட ஒன்றிய அரசு முன் வரவேண்டும்  என்றார். 

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஏனெனில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டு 12 ஆயிரத்து 390 கோடி ஜிஎஸ்டி வரியாக கிடைக்கிறது என குற்றம் சாட்டினார்.

கூட்டத்தில் ஆவுடையார்கோவில் வடக்கு தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் உதயம் சண்முகம், பொன்துரை, நகரச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் கேசவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *