மூத்த தலைவர் நல்லகண்ணு ‘பொதுவுடைமை  இயக்கத்தின் சிற்பி’ புகழாரம் சூட்டிய முதல்வர் 

பாசிமுதல்வரக்கு முடிவு கட்ட நாம் எடுத்துள்ள முயற்சிக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக திகழ்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 29- ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி படி நடைபெறும் – முத்தரசன்

மத்திய அரசு மதச்சார்பையும் மதத்தையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை சீரழித்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியில் மதசார்பறற ஆட்சி அமைக்க போராட வேண்டும் – நல்லக்கண்ணு 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு-வின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லகண்ணு- வை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உடன் இருந்தனர்.

பின்னர் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுவுடைமை  இயக்கத்தின் சிற்பி நல்ல கண்ணுவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தகைசால் தமிழர் விருது சங்கராய்யா, நல்ல கண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம் அந்த விருது பெருமை பெற்றுள்ளது.

தனது கொள்கை பயணத்தில் நழுவி விடமால் தொடர்ந்து பயணிக்கும் நல்லகண்ணு, கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் இலக்கணமாக தள்ளாத வயதிலும் செயல்படுபவர்.அவரது அரும்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என கேட்டுகொள்கிறேன். பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட  நாம் எடுத்துள்ள முயற்ச்சிக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக  திகழ்கிறார் என்றார்.

மேலும் திமுக அரசுக்கு  பக்க பலமாக இருந்து வழிகாட்டும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என அன்பான வேண்டுகோள் வைப்பதாக கூறினார். மத்திய அரசு மதச்சார்பையும் மதத்தையும் வைத்துக்கொண்டு இந்த நாட்டை சீரழித்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு மத்தியில் மதசார்பறற ஆட்சி அமைக்க போராட வேண்டும் என்றார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *