என்எல்சி போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற வேண்டும்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் 

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளரிடம் கூறியதாவது:

 வருகின்ற 26 ஆம் தேதி வீடு நிலம் தருகின்ற கடலூர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான மக்களுக்கு  நிரந்தர வேலையும், ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாயும், மாற்று மனையாக 10 சென்ட், வேலை வேண்டாம் என்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் உள்ளிட்ட பாதிக்கப்படுகின்ற கிராம மக்கள், விவசாயின் கோரிக்கையான 17 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் பேரணி நெய்வேலியில் புதுகுப்பம் ரவுண்டா இருந்து புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் திடலில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் 

இந்த ஆர்ப்பாட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட இருக்கிற கிராம மக்களோடு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள என்எல்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறேன்

என்எல்சி நிர்வாகம் காவல்துறை வைத்துக்கொண்டோ, மாவட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டோ, பொதுமக்களை விவசாயிகளை அச்சுறுத்தி அடிபணிய வைத்து விடலாம் என்று கருதினால் அதை ஒருபோதும் தமிழக வாழ்வுரிமை கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட முன்னேற்ற கழகம் கட்சி, மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் உள்ளிட்ட யாரும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் துறைவைகோ அவர்களும் பாதிக்கப்படுகின்ற கிராம மக்களின் உரிமைகளையும் என்எல்சி நிர்வாகம் இனி எப்போதும் பணிக்கு ஆள் எடுத்தாலும் இந்த மண்ணின் மக்களுக்கும் நிலம் வீடு கொடுத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்பில் 90% உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையுடனும் நடைபெறுகின்ற இந்த பேரணி மாபெரும் வெற்றி பேரணி, போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்

வேண்டுகோளை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சரவர்கள் ஏற்கனவே அவருடைய அலுவலகத்துடைய செயலாளர்கள் மூன்று அமைச்சர்கள் தொழில் துறை அமைச்சர் வேளாண்மை துறை அமைச்சர் தொழிலாளர் துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் அவர்களும் சுமூகமாக இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *