தனியார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் இலவச பாட புத்தகம், அதிரடி காட்டும் தமிழக முதல்வர்

தனியார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச பாட புத்தகம் வழங்க விரைவில் அரசாணை! பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ .லியோனி தகவல்!! சிவகாசியில் உள்ள  பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் சிவகாசி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அரசன் அசோகன் தலைமையில், அச்சக நிர்வாகிகள் பலர் பங்கேற்க நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தமிழக அரசின் பாடநூல் அச்சிடுவதில் சிவகாசி வட்டார அச்சக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அவைகளை களைய வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், அச்சக  உரிமையாளர்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு மீது எடுக்கப்படவுள்ள என்னென்ன நடவடிக்கைகள் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கிப் பேசினார் 

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது:- கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக பாடநூல் புத்தகங்கள் அச்சிடுவது குறித்த ஒப்பந்தம் வருகிற 2023 பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. 3ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அச்சு கூலியில் தான் இதுவரை பாட புத்தகங்கள் சிவகாசியில் உள்ள அச்சக நிறுவனத்தினர்களால் புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு வரப்படுகிறது. 

புதிய ஒப்பந்தமாக கூலி உயர்வில் 20 முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி தர தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். முன்பாக தமிழகம் தவிர்த்து மற்ற மாநில அச்சகத்தினர்களும் தமிழக பாடநூல் புத்தகங்களை அச்சிட்டு வந்தனர். அதாவது வெளிமாநிலத்தவருக்கு 10 சதவீதம் அச்சு பணியும், தமிழகத்தில் உள்ள அச்சகத்திற்கு 90 சதவீதம் அச்சுப் பணிகளும், வழங்கப்பட்டு வந்ததை மாற்றி அமைத்து, 

வரும் காலங்களில் 100 சதவீதம் தமிழகத்தில் உள்ள அச்சகத்திற்கு தமிழக பாடநூல் கழகம் சார்பாக புத்தகங்கள் அச்சிடும் பணி வழங்க ஒப்பந்தம் செய்து மாற்றி அமைக்கப்படும். இதற்கென தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அதற்கான அரசாணை வெளியிடப்படும். இந்தியாவிலேயே அச்சுப் பணியில் சிறப்பானதாகவும், தரமானதாகவும் இருப்பது சிவகாசி கைவண்ணம் தான் என பெயர் பெற்றுள்ளது.  

தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்பதில் முதல்வர் முழு கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறார். இதுநாள் வரை அரசு பள்ளிகளில் பயின்று வரும் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சத்துணவு திட்டம் பெற்று வரும் மாணவ- மாணவியருக்கு மட்டுமே தமிழக பாடநூல் கழகம் சார்பாக இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தது. 

இனி வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவ- மாணவியருக்கும் இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்குண்டான அரசாணையை தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விரைவில் அறிவிப்பார்கள். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *