அமைச்சர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி’க்கு பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்

தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இன்று பொறுப்பேற்ற உதயநிதிஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டுக்கோட்டையில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவையில் இன்று முதல் புதிய அமைச்சராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.

 உதயநிதிஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவர் பதவி ஏற்றபிறகு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு பகுதியில் நகர திமுக இளைஞரணி சார்பில் திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *