திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து 108 நாட்கள் அங்க பிரதட்சனம் செய்து வரும் சிதம்பர சித்தர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும்  பொருட்டு நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக திருப்பணிகள்-  ஊக்குவித்த  தமிழக அரசுக்கு  நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று முதல் தொடங்கி 108 நாட்கள்  திருக்கோவிலில்   தொடர் மஹாஅங்க பிரதட்சனம் செய்து   வரும் சிதம்பர சித்தர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோவில் உலக  புகழ் பெற்றது. இத்திருக்கோயிலுக்கு  தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வர்.

மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பதி க்கு இணையாக  மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு   சார்பில் 100 கோடியும் மற்றும் HCL நிறுவனர்  ஷிவ் நாடார் சார்பில் 200  கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மெகா  பெருந்திட்ட வளாக  திருப்பணிகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து திருப்பணிகள் திருக்கோயி யில் மிகவும் மும்முரமாக தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் இன்று 

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சிதம்பரத்தில் இருந்து வருகை புரிந்த ஆன்மீகத்தில் அதிக செயலாக்கம் கொண்ட சிதம்பர சித்தர் என்பவர்    தமிழக வரலாற்றில் முதன்முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள்  நடை பெற்று வருவதை ஊக்குவிக்கும்  விதமாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினக்கும்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கு 200 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய  HCL நிறுவனர்  ஷிவ் நாடார்க்கும்  பொதுமக்களின் சார்பாகவும்  தனது நன்றியை செலுத்தும் விதமாக  திருச்செந்தூர் முருகர் சன்னதியில் வைத்து தினந்தோறும் 108 நாட்கள் சிதம்பர சித்தர் அங்கபிரதஷ்னம் செய்ய  இருக்கிறார்

அதன்  முதல்  நாளான இன்று  திருச்செந்தூர் சுப்பிரமணிய  சுவாமி திருக்கோவிலில்  அரோகரா என கோஷமிட்டு மஹா அங்க பிரதட்சணம்  மேற்கொண்டு  இத்திருப்பணிகளுக்கு  நன்றி  கூறி  வருகிறார்.. இந்த சிதம்பர சித்தர் உலக மக்களின் நன்மைக்காக  பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *