‘மாமனிதன் வைகோக்கு’ வந்த சோதனை, டிக்கெட் வழங்குவதில் மதிமுகவினருக்கு இடையே சண்டை

வைகோ ஆவணப்படத்தின் டிக்கெட் வழங்குவதில் மதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம். தேனி மாவட்ட மதிமுக சார்பில் வைகோ குறித்த “மாமனிதன் வைகோ” என்ற ஆவணப்படம் தேனி வெற்றி சினிமாஸில் திரையிடப்பட்டுள்ளது.

இதற்காக மதிமுக தலைமை நிலைய செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ வெற்றி திரையரங்கிற்கு வந்தார். தேனி மாவட்ட மதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வைகோ ஆவணத் திரைப்படம் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆவணப்படம் காண்பதற்கான டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரையரங்கு வளாகத்தில் மதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கட்சியினருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் திரையரங்க வளாகத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *