எங்க காசுல உங்களுக்கு விளம்பரமா?… பாஜகவை வெளுத்து வாங்கிய பிடிஆர்!

மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு எல்லா திட்டங்களுக்கும் பிரதான் மந்திரி பெயரை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்வதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு செயல்படுத்துவீர்கள் என்பது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருப்பது தொடர்பான கேள்விக்கு, அரசாங்கம் வெளி விவகாரங்களில் பதில் சொல்வதில்லை. இது அரசுக்கு வந்த கடிதம் அல்ல. நிதி அமைச்சர் அடிப்படையில் கூறினேன். கட்சியில் அடிமட்ட தொண்டன்.

ஒரு தனி மனிதனாக என்னுடைய கருத்து உச்ச நீதிமன்றத்தில் 2013 வழக்கின் போது எங்களுக்கும் இந்த எந்த பங்குமில்லை என்ற வாதத்திற்கும் எந்த குழுவும் உருவாக்க போவதில்லை என்ற கருத்திற்கும் தற்போது தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்திற்கும் முரணாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஒரே நேரத்தில் பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ் ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது.

பல திட்டங்களை மத்திய அரசு பிரதான் மந்திரி என்ற துவக்குகிறது. ஆரம்பத்தில் வழங்கப்படும் மத்திய அரசின் பங்கு படிபடியாக நிதி குறைக்கப்படுகிறது. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 75% மாநில அரசின் பங்கு, 25% பங்கு தான் ஒன்றிய அரசின் பங்கு.

எனவே, ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு எல்லா திட்டங்களுக்கும் பிரதான் மந்திரி பெயரை வைத்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை திருத்தியே ஆக வேண்டும். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்” என தெரிவித்தார்.

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த கேள்விக்கு, “மகளிர் உரிமை தொகை அளிப்பது தொடர்பாக பிற மாநிலங்களில் என்ன விதமான தரவுத்தளம் (Database) உள்ளது. ஒரு திட்டத்தை எவ்வாறு, எப்படி குழு அமைத்து செயல்படுத்துகிறார்கள் என ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்த கேள்விக்கு, “மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவது கால தாமதம் ஆகிறது. குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு ஆகிவற்றிற்கு வரி விதிப்பது தொடர்பாகவும், ஜி.எஸ்.டி.க்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அறிக்கைகள் வருவது தாமதம் ஆவதே காரணம்.
ஜி.எஸ்.டி மரபு படி 3 மாதத்திற்கு ஒருமுறை கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, அறிக்கைக்காக காத்திருக்காமல் விரைவாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…