அரசு தொழிற் பயிற்சி நிலையங்ளை மேம்படுத்த  ரூ.2877 கோடி, முதலமைச்சர் அசத்தல்

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், அமராவதி புதூரில்  அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், கட்டப்படவுள்ள தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு இன்று  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  பெரியகருப்பன்   அடிக்கல் நாட்டினார் 

தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், எதிர்கால சந்ததியினர் தரமான கல்வியினை, தொழில்திறன் சார்ந்து பெற வேண்டும் என்ற அடிப்படையிலும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக முதல்வர்  மேற்கொண்டு வருகிறார்கள். தொழில் சார்ந்த படிப்புகளில் தகுதியையும், திறமையையும் மேலை நாடுகளுக்கு இணையாக தரமான முறையில் வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் புதிய பாடப்பிரிவுகளில் நவீன தொழில் நுட்பத்துடன் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையம் 4.0 கட்டிடம் அமைப்பதற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு, அதனை செயல்படுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், தமிழகத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் மொத்தம் 71 மையங்கள் கட்டப்படுவதற்கு தலா ரூ.3.73 கோடி வீதம் மொத்தம் ரூ.264.83 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் நிறுவுவதற்கான நடவடிக்கையும்,  அதில் நவீன இயந்திரங்கள் வழங்குவதற்கென ஒரு மையத்திற்கு தலா ரூ.40.50 கோடி வீதம் மொத்தம் ரூ.2877.43 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் .  

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் 4.0 இடம் நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். 

நவீனமுறையில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, சராசரி மதிப்பெண் பெறும் மாணாக்கர்களும்  தரமான தொழிற்கல்வி அளிக்கபட்டு மாணாக்கர்களை தயார் செய்து, 

தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கிட  முதலமைச்சர்  வழிவகை செய்துள்ளார். அதன் அடிப்படையில் தொழிற் பயிற்சி மையங்களில் 4.0 கட்டிடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

காத்திருந்து கடுப்பாகி களத்தில் இறங்கி சாலை சரி செய்த பொதுமக்கள்… அசத்தல் 

நெடுஞ்சாலை துறையிடம் சாலையை செப்பனிட கேட்டு சளித்துப்போன பொதுமக்கள் தாங்களாகவே செப்பனிட்டிருக்கின்றனர். கோவை…

ஐயோ தெரியாம செஞ்சிட்டேன் என்ன விட்டுடுங்க… போலீசாரிடம் கதறிய  கிஷோர்.கே.சாமி

அந்த நேரத்துல அத பண்ணிருக்க கூடாது… அது தவறு என்பதை உணர்ந்ததனால டிவிட்ட டெலிட் பண்னேன்… சைபர்…