தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை காத்திடும் வகையிலும், தமிழகத்தை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழும் வகையிலும் எதிர்வரும் 11ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மத நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில்  முத்தரசன் கலந்து கொண்டார் .

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  முத்தரசன், ஒன்றிய  பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 8 ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை. ஒற்றுமையாக உள்ள இங்கு மதத்தின் அடிப்படையில் மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக அரசு செயல்படுகிறது. 

மத நல்லிணக்கத்தை காத்திடும் வகையிலும், தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் வருகிற 11-ம் தேதி தமிழகமெங்கும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறும் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் மின்சார துறையை தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதை  கண்டித்து அங்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கட்சி வேறுபாடு இன்றி மின்துறை ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அந்த மாநில மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இத்தகைய போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…