பாஜகவினரை ஒரு கை பார்த்த கம்யூனிஸ்ட்கள்… பாதியில் கைவிடப்பட்ட கூட்டம்

பல்லடம் அருகே நடைபெற்ற ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கம்யூனிஸ்ட், பாஜக வினரிடையே மோதல்!! பாதியில் கைவிடப்பட்ட கூட்டம்

தமிழகம்  முழுவதும் இன்று காந்தி ஜெயதியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இடுவாய் ஊராட்சியில், தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது கிராமசபை கூட்டத்தில் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், விஏஓ ராதாமணி, செக்டரி நாகராஜன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் 

கூட்டம் துவங்கிய நிலையில் கம்யூனிஸ்கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பிரதமர் மோடிகுறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பஜகவினர் ஈஸ்வரனை தாக்க முற்பட்டனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கிராமசபை கூட்டத்தில் சுமார் 30 நிமிடங்கள் சலசலப்பு நீடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் இருதரப்பினரிடையே சமாதானம் பேசி மோதலை தடுத்து நிறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து கிராம சபைக்கூட்டம் பாதியிலேயே முடித்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் திரும்பிச்சென்றனர் இதனால் இடுவாய் ஊராட்சியில் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…