‘நத்தம் விஸ்வநாதனை, வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார்’ ‌அதிமுக அடிதடி உண்மையை போட்டுடைத்த தங்கமணி

அதிமுக இணைப் பொதுச்செயலாளர் பதவி ஓ.பி.எஸ் க்கு வழங்குவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஒற்றை தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திரு. தங்கமணி பரபரப்பு பேச்சு. நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று (2-10-2022) நாமக்கல்லில் நடைபெற்றது. இதில்  மாவட்ட அதிமுக செயலாளரும்,  முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான திரு ‌தங்கமணி கலந்து கொண்டு பேசுகையில்:- 

தற்போது அதிமுகவில் இருக்கின்ற நிலைமையை பார்த்து கட்சி இருக்குமா ? இரட்டை இலை இருக்குமா ? என தொண்டர்கள் குழம்பி உள்ளனர். அதிமுகவில் என்ன பிரச்சினை நடந்தது என தான் தெளிவாக கூறுகின்றேன். ஏன் என்றால் நான் பல்வேறு பிரச்சினைகளிலும் தான் தான் இருந்தேன்,  அதிமுக ஆட்சி இருக்கின்ற போது ஒ பி எஸ் அவர்கள் தர்ம யுத்தம் நடத்தினார்.

பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சிக்கு எதிராக எதிர்த்து வாக்களித்தவரை துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.  அந்த நிலையில் ஒபிஎஸ் அவர்களிடம் 12 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே இருந்தனர். அப்படியிருந்தும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒ பி எஸ்சை அரவனைத்தார். சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது.

முதல்வராக சிறப்பாக பணி புரிந்த நிலையில் வேண்டா வெறுப்பாக தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். வெற்றி வாய்ப்பை இழந்த பிறகும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதிலும் ஓபிஎஸ் பிரச்சனை செய்தார். நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எப்போதுமே அதிமுக தான் வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த முறை திமுக வெளியிட்டு விட்டது.

அதிமுக மேலவை வேட்பாளர்கள் தேர்வில் ஒபிஎஸ் அவர்கள் கால தாமதம் செய்ததால் தான் இறுதி நேரத்தில் தான் வெளியிடப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றைத்தலைமை வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என அனைவரும் தெரிவித்தனர். ஓபிஎஸ் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்.

இருந்தபோதிலும் மரியாதை குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ் அவர்களுக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஒ பி எஸ் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார், அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்.

ஒபிஎஸ் யிடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேசும் போது வைத்திலிங்கம் அவர்கள் அதிமுக ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்காக வைத்திலிங்கம் செயல்பட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என பேச்சுவார்த்தை நடக்கும் போதே நெருங்கிய நண்பரான நத்தம் விஸ்வாதனை அடிக்க பாய்ந்தவர் வைத்தியலிங்கம்.

அதிமுக சார்பில் 23 ம் தேதி நடைபெற்ற  பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுக்கலாம் என நினைத்து ஒபிஎஸ் அவர்களிடம் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே நீதிமன்றத்திற்கு சென்று தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என தடை வாங்கி விட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த கூடாது என தடை ஆணை வாங்கியதாக கூறி தவறான செய்தியை ஒபிஎஸ் பரப்புகிறார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக ஆவார் என்பது மாற்றுக்கருத்து இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…