மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை அவ்வாறு செயல்படும் ஆளுநருக்கு எதிராக ஆளும் கட்சி மக்களை திரட்டி போராட வேண்டுமென மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று மாலை கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திருமுருகன் காந்தி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும், நிறைவேற்றால் தடுக்கும் மாநில ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீட் தேர்வு  விசயத்தில் மாநில அரசு மக்களைத் திரட்டி ஆளுநருக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் .

அதிமுக கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார், எனவே ஆளுநரை கண்டித்து அதிமுகவும்  போராட வேண்டும் என திருமுருகன் காந்தி கேட்டுக் கொண்டார். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதே, என்று கேட்டதற்கு 

ஆர். எஸ். எஸ். இயக்கம் எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது என்றும், மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு எதிராக செயல்பட்டதும் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

திருமாவளவன், சீமான் போன்றவர்களை கைது செய்ய வேண்டும் என எச். ராஜா கூறுகிறாரே? என கேட்டதற்கு எச். ராஜா ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று வந்த பிறகு அதை அவரே செய்யலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…