‘பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும்’ ஜோசியம் சொல்லும் டிடிவி தினகரன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சியோடு சேர்ந்து  தான் போட்டியிடுவோம் இந்தியாவில்  பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அணிலைப் போல செயல்படுவோம்  

திமுகவைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் எப்பொழுதும் அவர்கள் வார்த்தை  ஜாலம் செய்து தமிழை வைத்து ஏமாற்றி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மா வழியில் ஆட்சியை கொடுத்திருந்தார்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய திருவிளையாடல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது .   

திமுக  விபத்தில் ஆட்சி வந்துள்ளது தலைவர் கட்சி ஆரம்பிப்பதற்கு அப்புறம் 1989இல் தலைவர் இறந்ததுக்கு அப்புறம் திமுக ஆட்சியை வந்தது 1996 ஆம் ஆண்டு  அம்மா மீது பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு  வந்தார்கள் 2006 இல் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தார்கள் அதற்குப் பிறகு திமுகவில் ஆட்சிக்கு வர முடியவில்லை. 

மு.க ஸ்டாலின் அப்பா பாணியில் மக்களிடம்  வாக்குறுதிகள் என்ற பெயரில் ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது இப்பொழுது அவருடைய சாயம் விழித்துக் கொண்டிருக்கிறது மக்கள் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள் அமைச்சர்களுடைய ஆணவ பேச்சு திமுக காரர்கள் உடைய நடவடிக்கை மற்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய குடும்பத்தினருடைய அடாவடி நடவடிக்கைகள் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது இனி வரும் காலத்தில் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் வருங்காலத்தில்  திமுக ஆட்சிக்கு  வரவிடாமல்  தமிழ்நாட்டு மக்கள் தடுப்பார்கள். 

அண்ணாமலை வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்ற கருத்துக்கு என்.ஐ. நடத்தும் சோதனையெல்லாம் பார்க்கும் பொழுது இந்திய இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து பல ஆயுதங்கள்  கைப்பற்றியது. இது எல்லாம் பார்க்கும்போது  வாய்ப்பு இருக்கலாம் என என்னுடைய சொந்த கருத்தாக நான் சொல்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…