தமிழகத்தை வன்முறையால் வட மாநிலமாக்க முயற்சி ‘வாய்பில்ல ராஜா’ அன்புமணி அதிரடி 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பின்னர் செய்தியாளரிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

தமிழக  அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய அவசர சட்டம் பரிந்துரை செய்துள்ளனர்  இதனை  ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் சட்டமாக மாற்ற வேண்டும் தாமதப்படுத்தக் கூடாது கடந்த ஆறு ஏழு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் என்பதுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் ஆகையால் ஆளுநர் அவர்கள் உடனடியாக கையெழுத்திட்டு சட்டமாக மாற்ற வேண்டும்

 விருத்தாசலம் அருகே உள்ள அம்பிகா, ஆருரான் இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மூடப்பட்டு உள்ளது அந்த சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் இந்த இரண்டு சக்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்

 என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவையில்லை நீர் நிலம் நிறைந்த மாவட்டமாக இருந்த கடலூர் மாவட்டம் தற்போது பாலைவனமாக மாறி உள்ளது இதற்கு முழு காரணம் என்.எல்.சி நிறுவனம் என்.எல்.சி நிறுவனத்தில் 300 பொறியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டதில் ஒருவர் கூட தமிழர் இல்லை இதற்கு ஒரு தீர்வு தமிழக அரசு மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் இதற்குமேல் நாங்கள் ஒரு பிடி மண்ணைக் கூட தர மாட்டோம் என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்த கிராமத்திற்கு உள்ளே செல்லக்கூடாது அப்படி மீறி சென்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்

தமிழக இளைஞர்களை கெடுக்கும் வழியில் ஹான்ஸ், குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு எங்கிருந்து வருகின்றது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தமிழகத்தில் தற்போது பாஜக நிர்வாகிகள் வீட்டில் மற்றும் கார்களில் பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது ஆனால் நம் தமிழ்நாடு அதுபோல் கிடையாது நம் தமிழகம் வட மாநிலம் போல் ஆகிவிடக்கூடாது யார் இந்த தவறு  செய்கிறார்களோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை தமிழக அரசு பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *