பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை, ஈபிஎஸ்-க்கு மீண்டும் செக் வைத்த நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்துக் கொண்டாட்டம்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 5 மாதங்களாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வந்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அவருடைய ஆதரவாளர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு நிரந்தர பொதுச் செயலாளராக தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முடியும் வரை அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனால்  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தீர்ப்பு வந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அலுவலகம் முன்பாக வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…