‘மக்களை தேடி பேரூராட்சி’ திமுக பெண் தலைவரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

மக்களை தேடி இலுப்பூர் பேரூராட்சி திமுக பெண் தலைவரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு மக்களை தேடி இலுப்பூர் பேரூராட்சி என்ற புதிய திட்ட தொடக்க விழா 1-வது வார்டில் நடைபெற்றது. இலுப்பூர் பேரூராட்சியின் இந்த புதிய முயற்சியை பேரூராட்சி தலைவர் சகுந்தலா வைரவன் தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் மொத்தம் 15 -வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு அளிக்கும் பொருட்டு அவர்கள் இருப்பிடத்திற்கே பேரூராட்சி நிர்வாகத்தினர் சென்று குறைகளை கேட்டறியும் முதல் முகாமம் 1-வது வார்டு பாப்பான்குடியில் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த குறைதீர் முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சகுந்தலா வைரவன்,துணை தலைவர் செந்தில் ராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் குடிநீர், தெருவிளக்கு,பொது சுகாதாரம்,பிறப்பு, இறப்பு பதிவு, அனைவருக்கும் வீடு, அடிப்படை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு தேவைகள் அடங்கிய மனுக்கள் இம்முகாமில் பெறப்பட்டது. 

இதில் மொத்தம் 40 மனுக்கள் வரப்பெற்றது. தெருவிளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முதல் முயற்சியாக 1-வது வார்டில் தொடங்கப்பட்ட இந்த குறைதீர் முகாம் வரும் நாட்களில் 15-ந்து வார்டுகளிலும் நடத்தப்படும் என்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ் இயங்கி வரும் திமுக அரசின் முதன்மை திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற வரலாற்று திட்டத்தை போன்று மக்களை தேடி பேரூராட்சி நிர்வாகம் என்றதொரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்திய பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர்,கவுன்சிலர், இந்திட்டத்திற்கு உடனடி தீர்வு காண உறுதுணையாற்றி வரும் திமுக நிர்வாகிகள் என அனைவருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *