பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது தடை, பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிப்பு

கோயம்புத்தூரில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் அது மெல்ல மெல்ல தனிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்த இயல்பு நிலைக்கு திரும்பும் சாதாரணமான சூழல் மீது அசாதாரண இடியாக விழுந்திருக்கிறது ஒன்றிய அரசாங்கம் விதித்திருக்கும் பி எஃப் ஐ அமைப்பின் மீதான தடை. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது தடை விதிக்கப்பட்ட நிலையில் இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான சூழல் காண முடிகிறது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அமைந்திருக்கும் கோட்டைமேடு பகுதியில் போலீசார் ஏராளமாக குறிக்கப்பட்டு இருக்கின்றனர். 

துணை ஆணையர் மாதவன் தலைமையிலான போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுபாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து இஸ்லாமிய அமைப்புகள் பெருமளவில் கொலுச்சி இருக்கும் கோவையில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க கமாண்டோ, அதி விரைவு படை உள்ளிட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். 

கோவையில் பதட்டம் மிகுந்த பகுதிகளில் ஒரு ஸ்டேஷனுக்கு ஒரு எஸ்.பி. என்ற அடிப்படையில் 6 எஸ்.பி.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 27 சிறப்பு செக்போஸ்ட்கள் அமைக்கப் பட்டுள்ளன. பதட்டமான பகுதிகளில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். 

ஏற்கனவே கோயம்புத்தூர் பதட்டத்துக்குரிய நகரமாகவே பார்க்கப்படுகின்றன. நாட்டின் எந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் கோவையில் அதற்கான ரியாக்சனை நாம் காண முடியும். இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை விவகாரம் விஸ்வரூபமாக வெடித்திருக்கும் நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சின் பதட்டம் தனியாமல் பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா தடையின் மூலமாக நீடித்திருக்கின்றன. 

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பு போராட்டம் நடத்தவோ அல்லது பி எஃப் ஐ அலுவலக பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடவோ கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றவர்களை கலைத்து சென்றனர். இந்த நிலையில் சமூக வலைதளம் பொது இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் விவாதிக்கும் ஒன்று கூடும் தளங்கள் போலீசாரால் உற்று நோக்கப்பட்டு வருகின்றன. 

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ஏராளமான போலீசார் கோவை மாநகர் முழுவதும் 24 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *