என்ஐஏ-வை வெளியேற்ற கோரி முதல்வருக்கு பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

திராவிட விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தை கட்சி உட்பட பல்வேறு இயக்கத்தினர் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மயிலாடுதுறை ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியிடம் மனு 

பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேரை கைது செய்து 45 பேரை சிறை வைத்த  என்ஐஏ அமைப்பை கண்டித்தும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் தமிழக அரசை மீறி செயல்படும் என்ஐஏ அமைப்பை வெளியேற்ற கோரி ஜி எஸ் டி அரசு அலுவலகத்தில் மனு அளித்த பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஜிஎஸ்டி அரசு அலுவலகத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக, தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்றும் தமிழக அரசை மீறி, செயல்படும், NIA அமைப்பை தமிழகத்திலிருந்து வெளியேற்ற கோரி  மனு அளிக்கப்பட்டது. பின் அவர்கள் கூறியதாவது

என்ஐஏ அமைப்பானது , இந்தியா முழுவதும், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த தோழர்கள், மீது பயங்கரவாதத்திற்கு நிதி, மற்றும் ஆள் திரட்டுவதாக கூறி, 106 நிர்வாகிகளை கைது, செய்து, 45 பேரை சிறையிலடைந்து உள்ளனர். 

இவர்களிடம் கணினி, செய்திதாள்கள் போன்றவற்றை மட்டுமே கைப்பற்றி உள்ளனர், PFI அமைப்பினர், பேரிடர்காலத்தில் மக்களுக்கு உதவுதல், ஆம்புலன்ஸ் சேவை, சுனாமி காலத்தில் 8000 பேரை அடக்கம் செய்தது போன்ற பல்வேறு மக்கள் பணியை  ஆற்றிவருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, இந்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும். 

மேலும், தமிழக அரசு சிறப்பாக சட்ட ஒழுங்கை நிர்வகித்து வரும் நிலையில், மத்திய அரசு, தமிழக அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது அத்துமீறும் செயல் என்றும் எனவே, தமிழகத்தில் உள்ள NIA அலுவலகங்களை தமிழகத்திலிருந்து உடனடியாக வெளியேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *