புதிய கட்சியை தொடங்கப்போகிறார் ஓபிஎஸ்? கசியவிட்ட தமிழக எம்.பி  

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி நாளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்பி திருநாவுக்கரசர்

அகில இந்திய அளவில் இருந்தாலும் சரி தமிழ்நாடு அளவில் இருந்தாலும் சரி ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் மாதிரி, ஜனநாயகத்தில் ஒரே கட்சி ஆட்சி என்றால் அது சர்வாதிகாரமாக போய்விடும், ஜனநாயகம் என்றால் ஆளுங்கட்சியும் இருக்க வேண்டும் எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும், 

தமிழ்நாட்டில் இப்போது உள்ள எதிர்க்கட்சி அதிமுக, எதிர்க்கட்சி பலமாக இருந்தால் தான் ஆளுங்கட்சி தன்னை மேலும் சிறந்த பணிகளை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கும், எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக ரீதியில் உள்ள விஷயம், அதுபோல் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக பல கூறுகளாக உடையாமல் இருந்தால் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படும், ஆனால் யார் எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்று பல கூறுகளாக போட்டியிட்டால் அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், 

எடப்பாடி ஒரு கட்சியை வைத்துள்ளார் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கப்போறார் என்ற தகவல் வருகிறது அதே நேரத்தில் சசிகலா கட்சியை கைப்பற்றி மீட்டெடுப்பேன். என்று கூறி வருகிறார் தினகரன் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் இதில் எது அங்கீகரிக்கப்பட உள்ளது என்பது மக்கள் கையில் தான் உள்ளது, 

கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகள் சில நேரத்தில் ஒரு பக்கம் இருக்கலாம், தொண்டர்கள் ஒரு பக்கத்தில் இருக்கலாம், இன்னொரு புறம் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒரு பக்கத்தில் கட்சியின் அமைப்பு படி இருக்கலாம் ஆனால் மக்கள் ஒருபுறம் இருக்கலாம், அதற்கு பல உதாரணங்கள் உள்ளது குறிப்பாக எம்ஜிஆர் திமுகவை விட்டு நீக்கும் பொழுது அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆளுங்கட்ச்சியாக இருந்த திமுக கலைஞர் பக்கமே இருந்தனர், அதன் பிறகு எம்ஜிஆருக்கு மக்கள் செல்வாக்கு வந்ததால் அவர் வெற்றியடைந்தார் 

அதேபோல் ஜெயலலிதா ஜானகி என்று இருக்கும் பொழுது மந்திரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜானகி பக்கம் தான் இருந்தனர் ஆனால் தொண்டர்களும் மக்களும் ஜெயலலிதா பக்கம் இருந்ததால் தான் அவர் வெற்றியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக வர முடிந்தது. 

எனவே கடந்த காலத்தில் கட்சி பிளவு படும் பொழுது  முடிவெடுக்க கூடியவர்கள் மக்கள் தான், அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வந்தால் தெரிந்துவிடும், அதன் பிறகு தான் அவர்கள் கட்சிக்குள் பிளவு பட்டு இருப்பவர்கள் செல்வாக்கு உறுதி செய்யப்பட்டு எதிர்க்கட்சியாக யார் வருவார்கள் என்பது தேர்தல் வந்தால் தான் தெரிய வரும். யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதோ அவர்கள் தான் நிலைக்க முடியும் என்பது தான் பொதுவான கருத்து.

நேற்றைய தினம் பாஜக தலைவர் நட்டா தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால்தான் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று சொல்லி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு கல்வி சுகாதாரம் வறுமை ஒழிப்பு மனிதவள மேம்பாடு தொழில் உள்ளிட்டவற்றில் முன்னிலை வகிப்பதாக தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாடு முதலமைச்சருக்கு புகழாரம் சுட்டியுள்ளார், 

இது நட்டாவுக்கு சரியான பதிலை தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார், அவருடைய கட்சித் தலைவருக்கே பாஜக சார்பிலே மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ரவி கூறியுள்ளது சரியான பதில் இந்த பதிலை கேட்ட பிறகாவது நட்டா தன்னை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *