பெட்ரோல் குண்டு வீச்சு; கோவையில் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!

Covai

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நகரம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் நகர் முழுவதும் பொருத்தப்பட்ட 400 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு வழக்குக்கு 3 தனிப்படை வீதம் 18 தனிப்படைகள் அமைப்பு காவல் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் குண்டு வீசப்படும் குற்ற சம்பவம் அரங்கேறி வருவதனால் போலீசார், அதிவிரைவு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் ஒரு வழக்குக்கு மூன்று தனிப்படைவிதம் 6 வழக்குகளுக்கு 18 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த குற்றங்கள் இரவு நேரத்தில் நடந்ததனால் வாகன எண்ணெய் சரி பார்த்து குற்றவாளிகளை பிடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க அடிப்படையை அமைத்து தீரும் காட்டி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களில் மட்டும் 15 பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், கோவை, ஈரோடு, ராமநாதபுரம், சத்தியமங்கலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக கோவையில் தொடர் சம்பவங்கள் காரணமாக ரயில் நிலையம், பேருந்து நிலைஉஅம் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க கோயில்கள், மசூதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *