விட்டா பாஜக அரசு இப்படி கூட அறிவிக்கும்… திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

ஐநூறு ,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவோடு இரவாக அறிவித்தது போல் இதுவரை அரசியலமைப்பு சட்டமாக இருந்தது செல்லாது மனுதர்மம்தான் அரசியலமைப்புச் சட்டம் என சொன்னாலும் சொல்வார்கள் என மத்திய அரசை விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் எதிரில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலையை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து விவிடி சிக்னல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்: அம்பேத்கரை பகைத்து விட்டு பாஜகவினர் ஒரு அடி கூட முன்னாள் வர முடியாது எனத் தெரிவித்தார். 

சாதி ஒழிப்பிற்கு நேர் எதிரானவர்கள் சங்கீகள் 8 ஆண்டுகள் அவர்களது கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டது. 2024 இல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் ஜாதிகளை பிரிப்பார்கள் அவ்வாறு பிரித்து மக்களிடையே பிளவு ஏற்படுத்துவார்கள் எனக் கூறியவர்

இப்படி ஒரு ஆட்சி எதிர்காலத்தில் உருவானால் டெல்லி தலைநகரமாக இருக்காது வாரணாசி தான் தலைநகரமாக இருக்கும். எனவே ஜனநாயக சக்திகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அழைப்பு விடுகிறோம் எனத் தெரிவித்தார். 

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவோடு இரவாக அறிவித்தது போல் இதுவரை அரசியலமைப்பு சட்டமாக இருந்தது செல்லாது மனதருமம்தான் அரசியலமைப்புச் சட்டம் என சொன்னாலும் சொல்வார்கள் எனவே இதை அனுமதிக்க கூடாது என கடுமையாக விமர்சித்தார். 

கலைஞருக்கு பிறகு திமுக என்ற கட்சி இருக்காது என்று சனாதன கும்பல் கணக்கு போட்டது. ஆனால் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார் ஸ்டாலின் இதுவே மிகப்பெரிய சாதனை. கலைஞர் இல்லை என்றாலும் திமுகவை ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளார் ஸ்டாலின். அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க கூடிய ஆற்றல் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *