காக்கி டவுசர் விரைவில் தீயில் கருகும்: காங்கிரஸ் பதில் தாக்குதல்..!! 

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டீ சர்ட் விலை குறித்து பாஜக விமர்சித்த நிலையில், காக்கி டவுசர் கருகுவதை போன்ற ஒரு  படத்தை இணையதளத்தில் வெளியிட்டு காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரை பயணம்  மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று முன்தினம் கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி அணிந்திருந்த பர்பெர்ரி பிராண்ட் டி சர்ட் விலை ரூ.41,257 என புகைப்படத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட இருந்தது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் ட்விட்டர் கணக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முன்பு அணிவகுப்புக்கு பயன்படுத்தி வந்த காக்கி டவுசர் தீயில் கருகும் வகையில் ஒரு படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் 145 நாட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெறுப்பிலிருந்து நாட்டை விடுவித்து பாஜக – ஆர்எஸ்எஸ் ஏற்படுத்தும்  பாதிப்புகள் களையப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *