காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது – மணீஷ் திவாரி 

காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும் நிலையில், அக்கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பேசிய மணீஷ் திவாரி  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமை தீவிர விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

BREAKING காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

அனைத்து சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து வருவது வேதனை அளிக்கிறது என மணீஷ் திவாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு சுய பரிசோதனை தேவை என்றும் 2020 டிசம்பர் மாதம் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எங்கள் கருத்தும் நிறைவேற்றப்பட்ட இருந்தால் காங்கிரஸ் கட்சி இத்தகைய சூழலுக்கு வந்திருக்காது என்று கருத்து கூறினார். 

மேலும், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமை விமர்சித்தது தொடர்பாக இப்போதைக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறிய உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *