ஆம் ஆத்மிக்கு எதிரான நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது – கெஜ்ரிவால்

பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, அங்கு ஆட்சியைப் பிடிக்கும் வேலையில் ஈடுபடுவதாக பா.ஜ.க மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மணீஷ் சிசோடியா மதுக் கொள்கை விவகாரத்தில் வீட்டில் நடைபெற்ற சி.பி.ஐ சோதனை டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதன் பிறகு பா.ஜ.க-வில் சேர்ந்தால் தன் மீதான சி.பி.ஐ அமலாக்கத்துறை வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறுவதாக பா.ஜ.க வினர் பேரம் பேசினர் என்று சிசோடியா அதிர்ச்சியை ஏற்படுத்தினார் 

ஆட்சியை கவிழ்க்க 6300 கோடி! இதுக்கு ஜிஎஸ்டி போடாமலே இருக்கலாம்ல! பாஜகவை  வெளுத்து வாங்கிய கெஜ்ரிவால்! | Arvind Kejriwal complains about spending  6300 crores on BJP to ...

ஆம் ஆத்மியின் 40 எம்.எல்.ஏ-க்களை விலை பேசி தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சிக் கவிழ்ப்பு நடத்த பா.ஜ.க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ரூ.800 கோடி செலவில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் ஆம் ஆத்மிக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார். 

மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க ஆபரேஷன் லோட்டஸ் என்ற நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபட்டது என்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *