சின்ன நகர்வால் பெரிய வலையில் மாட்டிக்கொண்ட கே. பாக்யராஜ்..!! பின்னணி என்ன..!!

இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ் நேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த நிலையில் இன்று அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் சங்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறி கே.பாக்யராஜ் மீது நடிகர் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போவதாக கூறுகின்றனர்.   

ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார் கே.பாக்யராஜ் – தமிழ் வலை

இது தொடர்பாக கே.பாக்யராஜுக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. 

இது சங்க விதிகளுக்கு முரணானது. உங்களின் இந்த செயல் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள்  தங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க வற்புறுத்தி வருகிறார்கள். சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் உங்களை சங்கத்தில் இருந்து நீக்க போர்க்கொடி எழுந்துள்ளது.  

தமிழ் பதிவுகள் | சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என நடிகர் கே.பாக்யராஜுக்கு  நடிகர் சங்கம் கடிதம்!

இது குறித்து நீங்கள் 15 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என  அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இந்த செயல் பின்னால் அரசியல் இருக்கும் என பாக்யராஜ் வட்டாரம் கூறி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *